கார்த்திகை மாதம்

கோவில் /விழாக்கள் / கார்த்திகை மாதம்

சோமவாரம்


காலை: கார்த்திகை மாதம் பிரதி வாரம் திங்கட்கிழமை அன்று சோமவாரம் உற்சவத்திற்கு ஜெபம் செய்யப்பட்ட சங்கு நீருடன் ஜெபக்குடத்தினீரும் மற்ற அபிஷேகங்களும் சுவாமிக்கும். ஜெபக்குட நீர் மற்ற அபிஷேகம் அம்பாளுக்கும் செய்து சாய் ரட்சியுடன் சுவாமி அம்பாளுக்கு அலங்காரம் செய்து தீபாரதனை பார்த்து காளாஞ்சி கொடுத்து பின் அலங்கார மண்டபத்தில் எழுந்தருளி இருக்கும் உற்சவமூர்த்திகளுக்கு சூட உபசார தீபம் காட்டி. உற்சவமூர்த்திகள் சுற்றி வருதல்.

முதல்வாரம்: நந்தி வாகனத்தில் ரிஷபாரூரடன் பார்வதி அம்மனும் சிம்ம வானத்தில் தனி சிவகாமியம்மனும். மூஷிக வாகனத்தில் பிள்ளையாரும் அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா வருதல்

மாலை: சோமாஸ்கந்தர் அம்பாள் பிள்ளையார் வெளிபிரகாரம் சுற்றிவருதல்.

முதல்வாரம் உபயதாரர்: கும.பெரி.குடும்பத்தினர்

இரண்டாவது வாரம் உபயதாரர் : மெ.ப.ராம.மற்றும் மெ.மெ.குடும்பத்தினர்

மூன்றாவது வாரம் உபயதாரர் :ஆ.வெ.குடும்பத்தினர்

நான்காவது வாரம் உபயதாரர் :பெ.ராம.குடும்பத்தினர்

ஐந்தாவது வாரம் உபயதாரர் :டத்தோ லெ.மெய்யப்ப செட்டியார் குடும்பத்தினர் வருகின்ற பொழுதில் : உபயதாரர் : மேற்கண்ட நான்கு உபயதாரர்களும் இணைந்து செய்தல்

இரண்டாவது மூன்றாவது நான்காவது ஐந்தாவது சோமவாரத்தில் நந்தி வாகனத்தில் ரிஷபாரூரடன் பார்வதி அம்மனும் சிம்ம வானத்தில் தனி சிவகாமியம்மனும். மூஷிக வாகனத்தில் பிள்ளையாரும் அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா வருதல்

திருக்கார்த்திகை


காலை: சங்கு அபிஷேகம்

மாலை: திருக்கார்த்திகை தினத்தன்று பஞ்ச மூர்த்தி திருவீதி உலாவிற்கு மூஷிக வாகனத்தில் பிள்ளையாரும் மயில் வாகனத்தில் முருகன் வள்ளி தெய்வானையுடன் நந்தி வாகனத்தில் சோமாஸ்கந்தர் உற்சவர் அம்பாள் முருகனுடன் உள்ள விக்ரமமும் சிம்ம வாகனத்தில் சிவகாமி அம்பாள் தனி அம்பாள் விக்கரமும் மற்றும் ஒரு நந்தி வாகனத்தில் சண்டிகேஸ்வரர் விக்ராமும் அலங்காரம் செய்து சூட உபசார தீபாரதனை பின் திருவீதி உலா வந்து சொக்கப்பண்ணை வைத்தல்.

சொக்கப்பனை சிவன் கோவில் முன்புறத்திலும் சின்ன ஊரணிப் பிள்ளையார் கோவிலுக்கு முன்புறத்திலும் வைத்தல்.

உபயதாரர்கள்: ந.கும குடும்பத்தினர் மற்றும் ந.மெ குடும்பத்தினர்.



நெல்லிமரம் துளசி கல்யாணம்



நெல்லிமரம் துளசி கல்யாணம் மற்றும் லெட்சுமி நாராயணர் திருக்கல்யாணம் கோவிலுக்குள் நடைபெறும்.

உபயதாரர்கள்: வீர.சொர்ணம் ஆச்சி



விழாக்கள்