காலசந்தி முடித்த பின் அன்னாபிஷேகத்திற்கு சாதம் 7 படி வடிக்க வேண்டும். கை பொறுக்கும் சூட்டில் மேற்படி அன்னத்தை சிவன் சன்னதியில் சேர்க்க வேண்டும். இது முடிந்த பின் மேற்படி அன்னத்தால் சிவனுக்கு அலங்காரம் பண்ணவேண்டும்.
இத்திற்கிடையில் அன்னாபிஷேக நைவேத்தியத்திற்கு
1) 4 படி புளியோதரை
2) 2 படி சர்க்கரை சாதம்
3) 7 பெரிய வடை
4) அப்பம் 2 படி
5) மோதகம் 2 படி
6) பாயசம் 1/2 படி
7) சுண்டல் 1 கிலோ
தயார் பண்ண வேண்டும்
பிரசாதம் தயார்பண்ணி/ சுவாமி அன்ன அலங்காரம் முடிந்தவுடன் துவாரபாலகரில் இருந்து ( சாயரட்சை பூசை மாதிரி ) நைவேத்தியம் ஆரம்பித்து செல்ல வேண்டும். சுவாமிக்கு சோடாஉபசாரம் தீபம் காட்டி சங்கல்பம்/ அர்ச்சனை செய்து பின் சுற்றுப்பிரகாரம் வந்து நடராசர் / நர்த்தனவிநாயகர் / தக்ஷிணாமூர்த்தி / அண்ணாமலையார் / சோமாஸ்கந்தர் /பிரகார பிள்ளையார் / காசிவிஸ்வநாதர் / பிரதோஷ சுவாமி / சுப்பிரமணியர் / மகாலக்ஷ்மி / பிரம்மா / துர்க்கை / நவக்கிரகம் / சூரியன் / சந்திரன் / அம்பாள் சோடாஉபசார தீபாராதனை + அர்ச்சனை / நந்தி / நால்வர் / பார்வதி பிள்ளையார் / தண்டாயுதபாணி / குடவரை பிள்ளையார் / முருகருக்கு நைவேத்தியம் அர்ச்சனை பண்ணி சின்ன ஊரணி பிள்ளையாருக்கு செல்ல வேண்டும். சின்ன ஊரணி பிள்ளையாருக்கு மற்றும் நாகருக்கு அபிஷேகம் செய்து சங்கல்பம் / அர்ச்சனை / பண்ணி நைவேத்தியம் காட்டி தீபாராதனை காட்டி காளாஞ்சி உபயதாரருக்கு கொடுத்து கோயிலுக்கு வந்து அன்னம் பிரிக்க வேண்டும்.
சிவன் சன்னதியில் அன்னத்தை 2 தட்டில் ( வாழை இலை போட்டு ) கொள்ளும் வரை நிரப்ப வேண்டும். இதற்கு முன் மேற்படி அன்னத்தில் இருந்து 4 உருண்டை அன்னம் பிசைந்து - போக அம்மன் 1 / சிவகாமி அம்மன் 1 / காசி விஸ்வநாதர் 2 உருண்டை மேற்படி மூர்த்தி பாதாம்களில் வைக்க வேண்டும் . பின் உபயதாரர் நகரத்தாருடன் சுவாமிக்கு தீபம் காட்டி பின் மேற்படி கூடை 2ம் 2அர்ச்சகர் தலையில் பரிவட்டம் காட்டி அதன் மேல் வைத்து எடுத்து கொண்டு போக அம்மன் வந்து தீபாராதனை காட்டி 1 உருண்டையை எடுத்து மேற்படி தட்டில் வைத்துக் கொண்டு பின் சிவகாமி அம்மனிடம் அதே மாதிரி செய்து 1 உருண்டையை எடுத்து வைத்துக்கொண்டு அங்கிருந்து கீழ் இறங்கி உள்ப்பிரகாரம் வந்து காசி விஸ்வநாதரிடம் 2 உருண்டைகள் எடுத்து கொண்டு அம்பாள் சன்னதிமுன் வெளிப்பிரகாரம் வந்து ராஜகோபுரம் வழியே திருக்குளத்திற்கு அம்மன் சன்னதி வாசலில் உள்ள படித்துறையில் அன்னத்தை கரைக்க வேண்டும். பின் இருமுறை கர்ப்பகிரகத்தில் இருந்து அன்னம் 2 தட்டில் எடுத்து வந்து ( அம்மன் சன்னதி வழி ) குளத்தில் கரைக்க வேண்டும் சிவன் சன்னதியில் உள்ள மீத அன்னத்தை கூடையில் எடுத்து உபயதரர்களிடம் கொடுத்து விட்டு சிவன் சன்னதியை சுத்தம் படுத்தி சிவன் / சிவகாமி அம்பாள் அபிஷேகத்திற்கு தயார் பண்ண வேண்டும்.
உபயதாரர் நகரத்தார்களுடன் மேற்படி 2 சன்னதிகளிலும் அபிஷேகம் பண்ணி வெள்ளி அங்கி சாத்த வேண்டும். இதற்கிடையில் நெய்வேத்திய பிரசாதம் 1 கிலோ லெமன் சாதம் + 1 கிலோ தயிர் சாதம் + வயிரவர் வடை மாலை தயார் பண்ணி வைக்க வேண்டும்.
நைவேத்திய தயாரானவுடன் உபாயத்தாரர் நகரத்தாருடன் உச்சிக்கால பூசை மாதிரி நைவேத்தியம் / அர்ச்சனை / 3 தீபம் காட்டி சுவாமிக்கு அர்ச்சனை / பின் அம்பாள் 3 தீபம் அர்ச்சனை / பைரவர் 3 தீபம் அர்ச்சனை / பின் சண்டிகேஸ்வரர் 1 தீபம் அர்ச்சனை பின் அம்பாள் சன்னதியில் விபூதி / காளாஞ்சி உட்காரவைத்து நகரத்தார் காரியக்காரர் / சிப்பந்திகள் பின் வெளியே வந்து உபயதாரர் மடப்பள்ளி பிரசாதமான புளியோதரை சர்க்கரை வடை விநியோகம் செய்தல்.