நற்சாந்துபட்டி நகரத்தார் கல்யாண மண்டபம்

நற்சாந்துபட்டி நகரத்தார் சங்கம் / நற்சாந்துபட்டி நகரத்தார் கல்யாண மண்டபம்

நற்சாந்துபட்டி நகரத்தார் கல்யாண மண்டபம்

1990 களில் நற்சாந்துபட்டியில் திருமண மண்டபங்கள் இல்லாததால் அதன் தேவை உணர்ந்து 1991ல் நடந்த சிவன் கோவில் குடமுழுக்கு விழா உபரி நிதியில் இருந்தும், நற்சாந்துபட்டி நகரத்தார்களிடம் இருந்தும் நிதியுதவி பெற்று கட்ட தீர்மானிக்க பெற்று திரு.S.V.சிவனடியான் செட்டியார் தலைமையில் ஒரு குழு அமைக்கப் பெற்று நிதி வசூல் செய்து கட்டப்பட்டது.

மண்டபமும் 18123 ச.அடி இடத்தில் 7931 ச.அடி கீழ் தளமும் 2568 ச.அடி மேல் தளமும் கொண்டுள்ளது. மண்டபமும் கட்டிமுடிக்கப்பட்டு 23.05.1992 அன்று தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் தற்பொழுது சட்ட அமைச்சராகவும், திருமயம் சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும் உள்ள உயர்திரு S.ரகுபதி B.Sc.,B.L, அவர்களால் திறந்து வைக்கப்பெற்று சிறப்பாக நடைபெற்று வருகிறது. மண்டபம் கட்ட மறைந்த திரு.S.V.சிவனடியான் அவர்கள் ஆற்றிய பணி மிகவும் பாராட்டப்பட வேண்டியது.

மண்டபத்தின் முதலாவது தலைவராக திரு.S.V.சிவனடியான் செட்டியார் அவர்களும் செயலாளராக திரு.மு.மெ.முத்துராமன் செட்டியார் அவர்களும் பொருளாளராக திரு.S.சிவசாமி செட்டியார் அவர்களும் இருந்து உள்ளார்கள்.

தரைத்தளத்தில் இடம் பற்றாக்குறையால் 2009ம் ஆண்டு நற்சாந்துபட்டி நகரத்தார்களிடம் நிதி வசூல் செய்து விரிவாக்கப்பட்டு முதல் தளம் கட்டி போஜன ஹால் மேல் தளத்தில் கொண்டு செல்லப் பெற்றது. சமையல் கூடம் பழமையான முறையில் இருந்ததால் வட அமெரிக்கா நகரத்தார் சங்கம் மற்றும் கிரில்லோ திரு.K.R.வீரப்ப செட்டியார் அவர்களால் நிதியுதவி வழங்கப்பெற்று புணரமைக்க பெற்று 11.04.2018 அன்று பயன்பாட்டிற்கு வந்தது.

கல்யாண மண்டப நிர்வாகக்குழு இரண்டாண்டிற்கு ஒரு முறை மகாசபை கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப் படுகிறது. தற்பொழுது தலைவராக திரு.கா.செந்தில்வெல் அவர்களும் செயலாளராக திரு.கோலப்பில்லா திரு.வீர.ராமு அவர்களும், பொருளாளராக திரு.பெரி.கண்ணன் அவர்களும் இருந்து திறம்பட செயல்படுத்தி வருகிறார்கள். மேலும் 30 ஆயுள் அங்கத்தினர்களும் நிர்வாக குழுவுடன் இணைந்து செயல்படுகிறார்கள்.

திருமணங்களுக்கு மட்டுமின்றி ஊர் மற்றும் நகரத்தார் பொதுக் காரியங்கள் நிகழ்ச்சிகள் சமூகப் பணி, சமுதாயப் பணி போன்றவைகளுக்கு எந்தவித கட்டணமும் இன்றி வழங்கப் பெற்று சமுதாய முன்னேற்றத்தில் நாங்களும் ஒரு அங்கம் வகிக்கிறோம்.

நிர்வாக குழு உறுப்பினர்கள்

தலைவர்
கா.செந்தில் வேல்
செயலாளர்
வீர.ராமு
பொருளாளர்
பொி.கண்ணன்
உறுப்பினர்
மெய்யப்பன் சுந்தரம்
உறுப்பினர்
கும. சொக்கலிங்கம்