நற்சாந்துபட்டி சின்ன ஊரணி

கோவில் / நற்சாந்துபட்டி சின்ன ஊரணி

நற்சாந்துபட்டி சின்ன ஊரணி

நற்சாந்துபட்டி நகரத்தாா் நன்மதிப்பில் சிகரத்தாா், கோட்டைகட்டி வாழ்ந்தாலும் ஊர்நலத்தில் உள்ளன்போடு நல்கிடும் நகரத்தாா், ஊருக்கு அணிகலனாம் சின்னஊரணி நீரின்றி இருந்தசூழலில் நல்உள்ளம்படைத்த திரு சாத்தப்பன் அண்ணனும் வடஅமெரிக்க நகரத்தாா் பெருமக்களும் இணைந்து நல்உதவி செய்திட. அதற்கு உறுதுணையாக உள்ளூர் நகரத்தாா் களப்பணியாற்றிய சேவையினால் ஊரணி நிரம்பியது. நகரத்தாா் உள்ளமும் நிறைந்தது சின்ன ஊரணி சிங்காரமாக மாற்றி மேலும் மெருகூட்டும் எண்ணம் கொண்ட திரு சேவா அழகப்பன் நகரத்தார்கள் ஒப்புதலோடு தன் செலவில் அதற்கான பணியை மேற்கொண்டார்.

ஒருபக்கம் சிவாலயம் மறுபக்கம் கல்விசாலை இரண்டிற்கும் மத்தியில் அழகுபொழியும் சின்ன ஊரணியை சுற்றி அழகுமலர்சோலையும் பசும்புல்களும் தென்னையும் அமைத்து ஊாின் வளமையை பிரதிபலிக்கசெய்ததோடு மற்றுமின்றி மாலைநேரம் அமர்ந்திருந்து மகிழ்வுற அழகான கல்பலகைகளும் வண்ணமிகு விளக்குகளும் ஒளிரசெய்து அழகு படுத்தப்பட்டது.மேலும் கோவிலில் நடந்திடும் விசேஷ நிகழ்வுகள் விபரத்தை சாலையில் பயணிக்கும் போதே அழகாய் கண்ணுற கணினிமுறையில் ஒளிரசெய்யப்பட்டது.

2021ஜீலை மாதத்தில் நகரத்தாாிடம் மேற்படி பணியை நிறைவுசெய்து விழா எடுத்து ஒப்படைக்கபட்டது. அவ்வப்போது ஊரணி உழவாரப்பணி செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.